-->

Tamil Mokka Jokes

18 2012

ஒருவர்: பாம்புகளுக்கு லெட்டர் வந்தா, போஸ்ட்மேன் ரொம்ப கஷ்டப்படுவாரா, ஏன்..?
மற்றவர்: எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ..?

பாபு: ஏண்டா, எங்க வீட்டுல மட்டும் கொசு அதிகமா வந்து கடிக்குது..?
கோபு: நீ எதுக்குடா, கொசுவுக்கெல்லாம் உங்க வீட்டு அட்ரசை கொடுக்கிறே..?

டாக்டர்: தூக்க மாத்திரை குடுத்தேனே, நல்லா வேலை செஞ்சுதா..?
நோயாளி: தெரியலை டாக்டர்… மாத்திரை போட்டதும் நல்லாத் தூங்கிட்டேன்…!

ஆசிரியர்: கணக்குப் பாடத்துல, ஏண்டா சைபர் மார்க் எடுத்திருக்கே..?
மாணவன்: கணக்குல சைபருக்குத்தான் மதிப்பு அதிகம்னு நீங்கதானே சார் சொன்னீங்க.. அதனாலதான்…

தந்தை: பள்ளிக்குப் போகும் நேரத்தில் தெருநாயிடம், புத்தகப் பையை வீசி விளையாடாதே… பிடுங்கி வைக்கப் போகுது… ஏற்கெனவே உனக்கு ஏழரை நாட்டுச்சனி வேற…
மகன்: எனக்கு ஏழரை நாட்டு சனி நடப்பது அந்த நாய்க்குத் தெரியுமா, டாடி?

ராமு: நம்ம பள்ளிக்கூடத்துல எல்லா வாத்தியாரும் சைவமாக இருந்தால் நல்லது என்கிறாயே… ஏன்?
பாலு: பரீட்சையில நமக்கு முட்டை போட மாட்டாங்களே..!

Leave a Reply