Sweet Kathal Kavithai

23 2014

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில்
உன் கண்களை மூடிக்கொள் .
உன் உதடுகளை விட ,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன

penne nee mouna viradham irundhal, mudhalil
un kankalai moodikkol.
un udhadukalai vida,
un kangal than adhigam pesukindrana

இதயம்

23 2014

அன்பே நீ என்னை காதலிக்க மறுத்திருந்தால் !
அன்றே என் இதயம் ஏமாந்து போயிருக்கும் …!
அன்பே நீ என்னை காதலித்து மறுத்ததால் ஒவ்வொரு நாளும் ஏமாந்து பொய் கொண்டிருகிறது ….

Budget Airlines Joke

05 2013

Budget Airlines Today :

Attendant : Welcome abroad ***** Airlines sir. May i see your ticket ?

Passenger : Sure.

Attendant : You are in seat 12B. That will be 5$. please!

Passenger : What for ?

Attendant : For telling you where to sit.

Passenger : But I already knew where to sit.

Attendant : Nevertheless, we are now charging a seat locator fee of $5. It is the airline’s new policy.

Passenger : That’s the craziest thing I ever heard. I wont pay it.

Attendant : Sir, do you want a seat on this flight, or not ?

Passenger : Yes, yes. All right. I will pay. But the airline is going to hear about this.

Attendant : Thank you. My goodness, your carry-on bag looks heavy. Would you like me to stow it in the overhead compartment for you ?

Passenger : That would be swell, thanks.

Attendant : No problem. Up we go , and done !. That will be $10 , please.

Passenger : What ??

Attendant : The airline now charges a $10 carry-on assistance fee.

Passenger : This is extortion. I wont stand for it.

Attendant : Actually , you’re right, you cant stand. You need to sit, and faster your seat belt. We’re about to push back from the gate. But , first I need that $10.

Passenger : No way!

Attendant : Sir, if you don’t comply, i will be forced to call the air marshal. And you really don’t want me to do that.

Passenger : Why not ? Is he going to shoot me ?

Attendant : No, but there’s a $50 air marshal hailing fee.

Passenger : Oh, all right , here take the $10. I can’t believe this.

Attendant : Thank you for your cooperation. sir. Is there anything else i can do for you ?

Passenger : Yes. It’s stuffy inhere , and my overhead fan doesn’t seem to work. Can you fix it ?

Attendant : Your overhead fan is not broken , sir. Just insert two 25 cents into the overhead coin slot for the first five minutes.

Passenger : The airline is charging me for cabin air ?

Attendant : Of course not, sir. Stagnant cabin air is provided free of charge. It’s the circulating air that costs 50 cents.

Passenger : I don’t have any 25 cents. Can you make change for a dollar ?

Attendant : Certainly Sir ! Here you go !

Passenger : But you’ve given me only 3×25 cents for my dollar.

Attendant : Yes , there’s a change making fee of 25 cents.

Passenger : Crying out loud….. All i have left is a lousy 25 cents ? What the heck can i do with this ?

Attendant : Hang onto it. You’ll need it later for the lavatory.

Good Friday Quotes 2013

26 2013

“See, my servant shall prosper, he shall be raised high and greatly exalted.”
– Isaiah 52:13

“Father, into your hands I commend my spirit.
In you, O LORD, I take refuge;
let me never be put to shame.
In your justice rescue me.
Into your hands I commend my spirit;
you will redeem me, O LORD, O faithful God.”
– Psalm 31

“Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness: by whose stripes ye were healed.”
– I Peter, 2:24

“Jesus said to her, ‘I am the resurrection and the life. He who believes in me will live, even though he dies; and whoever lives and believes in me will never die.'”
– John 11:25-26

“God so loved the world that He gave His only begotten Son.”
– John 3:16

“We may say that on the first Good Friday afternoon was completed that great act by which light conquered darkness and goodness conquered sin. That is the wonder of our Saviour’s crucifixion.”
– Phillips Brooks

“By the cross we, too, are crucified with Christ; but alive in Christ. We are no more rebels, but servants; no more servants, but sons!”
– Frederic William Farrar

“The cross was two pieces of dead wood; and a helpless, unresisting Man was nailed to it; yet it was mightier than the world, and triumphed, and will ever triumph over it.”
– Augustus William Hare

“Exalt the Cross! God has hung the destiny of the race upon it. Other things we may do in the realm of ethics, and on the lines of philanthropic reforms; but our main duty converges into setting that one glorious beacon of salvation, Calvary’s Cross, before the gaze of every immortal soul.”
– Theodore Ledyard Cuyler

“So shall we join the disciples of our Lord, keeping faith in Him in spite of the crucifixion, and making ready, by our loyalty to Him in the days of His darkness, for the time when we shall enter into His triumph in the days of His light.”
– Phillips Brooks

A Short Tamil Story

18 2013

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்க மாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்து விட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடிப் பார்த்து அது கிடைக்காமல் புலம்பினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டுப் பார்த்தும் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்கள்… யாராவது கொண்டு வந்து கொடுப்பார்கள்” என்றார்.

அவரும் மனைவியின் சொற்படி அவர் பணப்பையைக் கொண்டு வந்து கொடுப்பவர்க்குப் பரிசு என்று அறிவித்தார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து பரிசு பெறலாம் என்று நினைத்தார்கள். அவர்களும் தேடிப் பார்த்தனர். யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பின்பு அருகிலிருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் மரியாதையுடன் வாழ வேண்டுமென்று விருப்பப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணமுடையவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது ஒரு வேலை செய்து, சம்பாதித்து, பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்குப் போய் வேண்டிக் கொண்டார்.
அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிபட்டுக் கீழே கிடந்தது, அதைப் பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்தப் புறாவைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்குக் கொண்டு சென்று தண்ணீரை எடுத்து, அந்தப் புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்தப் புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்து விட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டுப் போயிட்டாங்க, அதைத் தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த ஊருக்குள் விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கிருந்த சிலரிடம் விசாரித்தார். இந்தப்பணப்பை சோமனுடையது என்றும் அதைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்குப் பரிசு கொடுப்பதாக அறிவித்திருப்பதாகவும் சொன்னார்கள்.
பூபாலனும் அவர்கள் சொன்ன சோமன் வீட்டைத் தேடிப் பிடித்துச் சென்று தனக்குப் பணப்பை கிடைத்த விபரத்தைச் சொன்னார், சோமனும் மகிழ்ச்சியுடன் அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அந்த நேரம் அவருடைய மனதில் ஒரு கெட்ட எண்ணமும் உருவானது. நமக்குத்தான் பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்கிறது, இவனுக்குப் பரிசு கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
கெட்ட எண்ணம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, அதை மரியாதையாகக் கொடுத்து விடு, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்” என்று கத்தினார்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் அந்தப் பணப்பையில் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் பரிசு வாங்குவதை விட இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியைச் சொன்ன அந்த ஊர்க்காரகளில் சிலர், சோமன் பணப்பை கொண்டு வந்தவருக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்று அறியும் ஆவலுடன் மேலும் சிலரை அழைத்து வந்தனர். அங்கு பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த அறிவிப்பு பற்றி மரியாதை ராமனுக்குத் தெரியும், அந்த அறிவிப்பில் வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். சோமன் பரிசு கொடுக்காமல் ஏமாற்ற நினைப்பதையும் தெரிந்து கொண்ட மரியாதை ராமன், சோமனுக்குச் சரியான தண்டனை கொடுக்க நினைத்து தனது தீர்ப்பைக் கூறினார்.
“சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்குக் கொடுத்து விட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்தப் பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையைக் கண்டுபிடித்தவுடன் சோமனே பரிசு கொடுப்பார்”
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும், சோமன் காணாமல் போன பணம் கிடைத்தும் பரிசு கொடுக்காமல் தான் ஏமாற்ற நினைத்ததற்கு சரியான தண்டனை கிடைத்தது என்று எண்ணிக் கொண்டு வருத்தத்துடன் பணப்பையை பூபாலனிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குட் சென்றான். பூபாலன் தனக்குக் கிடைத்த பணத்தில் 10 பங்குத் தொகையை அம்மன் கோயிலுக்குக் கொடுத்து விட்டு, மீதிப்பணத்தை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்தார்.

Funny Nursery Kid

22 2013

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், “ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
‘எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!’

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?

22 2013

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?

1. அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.
2. முட்டாளை நடிப்பினாலும், நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.
3. குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.
4. வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.
5. தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.
6. ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.
7. திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும், வீரனை தைரியத்தாலும்,
8. குருவை பணிவான அன்பினாலும், மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.

ஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது;
நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;
மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம்.