Sri Kandha Sasti Kavasam

17 2015

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.

குறள் வெண்பா
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவணபவனார் சடுதியில் வருக

ரகணபவச ரரரர ரரர
ரிகண பவச ரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீராநமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென்

வசர ஹணபவ வருக வருக
asurar kudi kedutha ayya varuga
என்னையாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்

பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொக மொக மொகமொக மொக மொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முரகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்றும்

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலைவைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
ஐவிரலடியினை அருள் வேல் காக்க
கை களிரண்டும் கருணை வேல் காக்க

முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க

எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
varumbaga thannil vachiravel kaaka

அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்
அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்

கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

ஆனையடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய் விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டியுருட்டு கால் கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர் வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதி
பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்தரணை பருஅரையாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய்

மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக
உன்னைத் துதித்த உன்திருநாமம்
சரவணபவனே சைலொளிபவனே
திரிபுரபவனே திகழொளிபவனே

பரிபுரபவனே பவமொழிபவனே
அரிதிருமுருகா அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த இனியவேல் முரகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
பழநிப் பதிவாள் பாலகுமரா

ஆவினன் குடிவாள் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா
சமரா புரிவாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முரகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்
கந்தசஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடனாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடனொரு நினைவதுமாகி

கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசைமன்ன ரென்மர் செயலதருள்வர்
மாற்றலாரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
கந்தர் கை வேலாம் கவசத்தடியை
வழியாய் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வசத்துரு சங்காரத்தடி

அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்துணவாக
சூரபத்மாவைத் துணித்தகையதனால்
இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகள் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெற்றி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

கந்தர் அநுபூதி

17 2014

காப்பு
(நெஞ்சக் கனகல்)

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

1. ஆடும் பரிவேல்

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.

2. உல்லாச நிராகுலம்

உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.

3. வானோ புனல்

(ஆறுமுகமான பொருள் எது?)

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.

4. வளைபட்ட

(மனை மக்கள் எனும் மாயை அகல அருள்வாய்)

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

5. மகமாயை

(மாயை அற)

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

6. திணியான மநோ

(ஆறுமுகன் அடியாரை ஆட்கொள்வான்)

திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? ..என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

7. கெடுவாய் மனனே

(ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

8. அமரும் பதி

(மயக்கம் தீர்ப்பான் முருகன்)

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.

9. மட்டு ஊர்

(மங்கையர் மையல் தூரத்தேக)

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.

10. கார் மா மிசை

(காலன் அணுகாமல் காத்திடுவான் கந்தன்)

கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

11. கூகா என

(உறவினர் அழப் போகா வகை உபதேசம் பெற்றது)

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.

12. செம்மான் மகளை

(சும்மா இரு சொல் அற)

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

13. முருகன் தனி வேல்

(முருகனின் அருளைக் கொண்டு மட்டுமே
அவனை அறிய முடியும்)

‘முருகன், தனிவேல் முனி, நம் குரு’ என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று,
இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று
என நின்றதுவே.

14. கைவாய் கதிர்

(மனதிற்கு உபதேசம்)

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

15. முருகன் குமரன்

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்?
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

16. பேராசை எனும்

(பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.

17. யாம் ஓதிய

(கற்றதன் பலன் கந்தன் கழலடிக்கு தன்னை
அர்ப்பணம் செய்வதே)

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.

18. உதியா மரியா

(துதி மயமான அநுபூதி)

உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.

19. வடிவும்

(வறுமையை நீக்கி அருள்வாய்)

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

20. அரிதாகிய

(உபதேசம் பெற்றதை வியத்தல்)

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.

21. கருதா மறவா

(திருவடி தீட்சை அருள்வாய்)

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.

22. காளைக் குமரேசன்

(தன் தவப் பேற்றை எண்ணி அதிசயித்தல்)

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.

23. அடியைக் குறியாது

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.

24. கூர் வேல் விழி

(மங்கையர் மோகம் கெட, திருவருள் கூட)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.

25. மெய்யே என

(வினை மிகுந்த வாழ்வை நீக்கு முருகா)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

26. ஆதாரம் இலேன்

(திரு அருள் பெற)

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

27. மின்னே நிகர்

(வினையால் வருவது பிறவி)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.

28. ஆனா அமுதே

(நீயும் நானுமாய் இருந்த நிலை)

ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

29. இல்லே எனும்

(அறியாமையை பொறுத்தருள் முருகா)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

30. செவ்வான்

(உணர்த்திய ஞானம் சொல்லொணானது)

செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

31. பாழ் வாழ்வு

(ஜெகமாயையில் இட்டனையே .. நீ வாழ்க)

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

32. கலையே பதறி

(கலை ஞானம் வேண்டாம்)

கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.

33. சிந்தா ஆகுல

(பந்தத்தின்று எனைக் காவாய்)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.

34. சிங்கார மட

(தீநெறியினின்று எனைக் காவாய்)

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.

35. விதி காணு

(நற் கதி காண அருள்வாய்)

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.

36. நாதா குமரா

(சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?)

நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.

37. கிரிவாய் விடு

(உன் தொண்டனாகும்படி அருள்வாய்)

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

38. ஆதாளியை

(என்னையும் ஆண்ட கருணை)

ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

39. மாவேழ் சனனம்

(பிறப்பையும் ஆசையையும் நீக்கு முருகா)

மாஏழ் சனனம் கெட மாயைவிடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.

40. வினை ஓட

(வேல் மறாவதிருப்பதே நமது வேலை)

வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.

41. சாகாது எனையே

(காலனிடத்திலிருந்து எனைக் காப்பாற்று)

சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.

42. குறியை

(எவ்வேளையும் செவ்வேளையே நினை)

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

43. தூசா மணியும்

(சொல்லற எனும் ஆனந்த மெளனம்)

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

44. சாடும் தனி

(முருகன் திருவடி தந்தான்)

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.

45. கரவாகிய கல்வி

(மெய் பொருளே, உன் நிலையை உணர்த்து)

கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே.

46. எந்தாயும்

(மாதா பிதாவும் இனி நீயே .. மனக் கவலை தீராய்)

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.

47. ஆறாறையும்

(மேலான தவ நிலை அருள்வாய், காவலனே)

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

48. அறிவு ஒன்று

(மேலான தவ நிலை அருள்வாய், காவலனே)

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

49. தன்னம் தனி

(இனிமை தரும் தனிமை .. விளக்க முடியுமா?)

தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

50. மதி கெட்டு

(முருகன் அருளால் முக்தி பெற்றேன்)

மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

51. உருவாய் அருவாய்

(குருவாக வந்து அருளினான் கந்தன்)

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

52. காணா விழியும்
(சலக்கரை பெற)

காணா விழியுங் கருதா மனமும்
வீணாய் விடமுன் விதியோ விதியோ
பூணாள் குறமின் புனமும் வனமும்
நாணா துநடந் திடுநா யகனே.

53. ஊணே பொருளா
(இழந்ததைப் பெற)

ஊணே பொருளா யுழலுற் றடியேன்
வீணே கெடமுன் விதியோ விதியோ
பூணே யிமையோர் புகழே மிகயான்
சேணே பெறவேல் விடுதே சிகனே.

54. கழுவார் அயில்வேல்
(நோய் தீர)

கழுவா ரயில்வேல் கருணைக் கடலின்
முழுகார் குறுகார் முளரிக் கைக்கொண்
டொழுகார் வினையூ டுழல்வா ரவரோ
அழுகார் தொழுநோ யதிபா தகரே.

55. விண்ணார் பதமும்
(மோக்ஷ சாதனம் பெற)

விண்ணார் பதமும் விரிநீர் புடைசூழ்
மண்ணார் பதமும் மகழேன் மகிழேன்
தண்ணா ரமுதே சயிலப் பகையே
கண்ணா ரமுதே கனியைப் பெறினே.

56. உனையே யலதோர்
(உச்சாடனஞ் செய்ய)

உனையே யலதோர் பரமுண் டெனவே
நினையே னெனையூழ் வினைநீ டுமதோ
கனையேழ் கடல்போல் வருகார் சமணர்
முனையே தெறுசண் முகவே லவனே.

57. இரவும் பகலும்
(சத்துருவைச் சங்கரிக்க)

இரவும் பகலுந் துதிசெய் திருதாள்
பரவும் பரிசே பரிசின் றருள்வாய்
கரவுண் டெழுசூர் களையக் கதிர்போல்
விரவுஞ் சுடர்வேல் விடுசே வகனே.

58. இலகுந் துடி
(புகழ் பெற)

இலகுந் துடிநே ரிடையார் விழிகூ
ரலகம் பெனவே யறியா தழிகோ
கலகந் தருசூர் கதறப் பொருதே
ழுலகம் புகழ்பெற் றிடுமோ தயனே.

59.. மாதோ மலமாயை
(உலகநடை அறிய)

மாதோ மலமா யைமயக் கவருஞ்
சூதோ வெனமெய் துணியா வெனையின்
றேதோ விருள்செய் துநிறைந் திடுவார்
தீதோ டவருள் சிவதே சிகனே.

60. களவும் படிறும்
(தேர்ந்து கோள்ள)

களவும் படிறுங் கதமும் படுமென்
னளவுங் கதிர்கொண் டருள்சேர்ந் திடுமோ
இளகுங் குறமின் னிருதோள் முலையும்
புளகம் பரவப் புணர்வே லவனே.

61. வாழைக் கனி
(தேசம் செழிக்க)

வாழைக் கனிமா மாதுரச் சுளையே
ஏழைக் கரிதென் றிடுவா ருளரோ
பாழைப் பயிற்செய் திடுசிற் பரையின்
பேழைப் பொருளா கியவே லவனே.

62.. சதிகொண்ட
(செங்கோல் செலுத்த)

சதிகொண் டமடந் தையர்தம் மயலிற்
குதிகொண் டமனத் தனெனக் குறியேல்
மதிகொண் டநுதற் குறமங் கைகுயந்
துதிகொண் டுமணந் தருடூ யவனே. ???

63. தாயே எனை
(செங்கோல் நடக்க)

தாயே யெனையா டனிவே லரசே
காயே பொருளாய் கனிகை விடுமோ
பேயே னிடையென் பெறவந் தெளிதாய்
நீயே மறவா நெறிதந் ததுவே.

64. சின்னஞ் சிறியேன்
(நகரி சோதிக்க)

சின்னஞ் சிறியேன் சிதைவே செயினும்
பொன்னம் பெரியோர் பிழைசெய் குவரோ
கன்னங் கரியோன் மருகா கழறத்
தன்னந் தனியென் றனையாண் டவனே.

65.. துடிபட்ட மடந்தையர்
(படை வெல்ல)

துடிபட் டமடந் தையர்சூ றையிலே
குடிபட் டிடுமென் குறைகட் டறுமோ
வெடிபட் டெழுசூர் கிளைவே ரொடுசென்
றடிபட் டிடவென் றமரும் பதியே.

66.. கல்லேய் மனமும்
(எதிரி முறிய)

கல்லேய் மனமுங் கணையேய் விழியும்
வில்லேய் நுதலும் பெறுமெல் லியர்வாய்ச்
சொல்லே பதமாய்த் துடிபட் டழிய
வல்லே னலனியான் மயில்வா கனனே.

67. கலை கற்கினும்
(கொலை களவு வஞ்சம்தீர)

கலைகற் கினுமென் கவிபா டினுமென்
நிலைகற் கினுமென் னினைவந் துணராக்
கொைலுகற் றிடுவோர் கொடுவஞ் சகமா
மலைகட் டறவென் றருள்வாய் குகனே.

68. சனகாதியர்
(அபசாரம் வரமலிருக்க)

சனகா தியருக் கரியாய் தமியா
யெனகா ரணமா கவிரும் பினைநீ
கனகா சலவில் லிகளிக் கவரு
மனகா வலமா வமரர் பதியே.

69. கல்லேனயலார்
(அற்பரை நீங்க)

கல்லே னயலார் கவியைப் பொருளாய்ப்
புல்லே னவர்வாழ் வுபுரிந் தருள்வாய்
வல்லே யினிவந் தருளா யணியா
நில்லே னிறைநெஞ் சொடுவே லரசே.

70. மஞ்சைப் புரையார்
(மறுதெய்வந் தொழாதிருக்க)

மஞ்சைப் புரையார் மதிதோன் றுதலால்
பஞ்சைப் பயில்தே வரொடிம் பர்களி
னெஞ்சைப் பிரியாய் நிகழ்மா மதியின்
பிஞ்சைப் புனையும் பெருமான் மகனே.

71. விதிவந் தனை
(விதிப்படி பணிவிடை செய்ய)

விதிவந் தனைசெய் விமலன் கழலே
கதியென் றடைவார் கடனா வதுவே
பதிகண் பணியோ டழிநல் குரவும்
மதிசஞ் சலமும் மண்ணாய் விடுமே.

72. என்னே ரமுநின்
(குருவுக்குப் பணிவிடை செய்ய)

என்னே ரமுநின் னருதாண் மலரைப்
பொன்னே யெனயான் புனையப் பெறுமோ
அன்னே யமுதே யயில்வே லரசே
கொன்னே பிறவிக் குறைபெற் றிடினே.

73. அருளைத் தரு
(குருவுக்கு விதிப்படி பணிவிடை செய்ய)

அருளைத் தருநின் னடியிற் பணியார்
மருளைச் சிதையார் மதிகெட் டவர்தாம்
குருளத் தசையிற் குருவா வினவும்
பொருளைத் தெளியப் புகறே சிகனே.

74. தொண்டாகிய
(தொண்டராக)

தொண்டா கியநந் துயர்தீ ருமருந்
துண்டா கியுமென் றுலைவாய் மனனே
வண்டார் குழல்வள் ளிமணந் தருளும்
தண்டா யுதவேள் சரணந் துதியே.

75. அழியா நிலை
(கிருபையால் பதம்பெற)

அழியா நிலைதந் தருள்சே வலனே
விழியா லுணர்வார் விதமே புகல்வாய்
பழியார் புகழார் பழிநண் பிகழா
ரொழியா ரொழியா ருலகியா வையுமே.

76. கூர் வேல் விழி
(தெய்வ நீதியாக)

துனிநா ளும்விடா துதொடர்ந் தபல
னினிநா னணுகா மையியம் பினனால்
பனிநாண் மதிசூ டிபணிந் துதொழும்
தனிநா யகனா கியசண் முகனே.

77. ஞானந் தனை
(ஞானம் பெற)

ஞானந் தனைநின் றுநடத் தவிடா
மோனந் தனையென் றுமொழிந் திடுமோ
ஆனந் தநடத் தனளித் தருளும்
மானந் தனிவேல் மயில்வா கனனே.

78. மதமுஞ் சினமும்
(பரமார்த்த மடைய)

மதமுஞ் சினமும் வளருந் தருவே
சதமென் றுணருஞ் சனனுக் கெளிதோ
கதமுந் தியருள் கனிவித் திடுவேல்
பதமுஞ் சுரமும் பதமே பெறலே.

79. அய்யா முடல்
(பஞ்சபூதங்களை அறிய)

அய்யா முடலூண் மயமா யுளதால்
அய்யா றாறு மறிவித் தருள்வாய்
செய்யா முருகா திகழ்வே லரசே
அய்யா குமரா அருளா கரனே.

80.. நவியென் றிடு
(குருவாக)

நவியென் றிடுகண் மடவார் நனிகேள்
செவியென் றயில்வேள் புகழ்சென் றிலதோ
கவியென் றவன்வார் கழல்பெற் றிலதோ
ரவியென் றவன்வாழ் புவியன் றியதே.

81. பெரியோ ரெனினும்
(தானே குருவா யிருக்க)

பெரியோ ரெனினும் புலையோ ரெனினுஞ்
சிறியோ ரெனினுந் தெளிவோ ரவரோ
குறியோ ரெனினுங் குருவா வருள்வா
னெறியோ டொழுகும் நிலைபெற் றிடினே.

82. பக்திக் கயலே
(பக்தி செய்ய)

பக்திக் கயலே னனிநின் பதமுஞ்
சித்திக் கயலே னெனறிண் ணமதே
புத்திக் கடலே பொருவே லரசே
முத்திக் கனியே முனிபுங் கவனே.

83. பேயா கிலு
(மகா தேசிகனாக)

பேயா கிலுநன் றதிலும் பிறிதென்
றேயா தனைவந் தடிமைத் தொழில்கொண்
டோயா தெனைநீ யொழியத் தகுமோ
வாயா ரமுதே மயில்வா கனனே.

84. மிகவுங் கொடியேன்
(கடவுள் துணையாயிருக்க)

மிகவுங் கொடியேன் விதிகுன் றிடவந்
திகமும் பரமும் பெறவென் றிசைவாய்
சுகமுஞ் சுகமுந் தொடர்வேல் கொடுமுச்
சகமுந் தனிகாத் தருள்சண் முகனே.

85. நசையன் பிலர்
(கடவுளை ஏவல்கொள்ள)

நசையன் பிலர்பா னயவா தொழியின்
வசையுண் டெனுமவ் வழிநின் றருள்வாய்
விசையம் பெறுசூர் வெருவப் பொருதெண்
டிசையும் புகழத் திகழ்வே லவனே.

86. உருகற் பகமென்
(கற்பகத்தரு பெற)

உருகற் பகமென் றுனையே யடைவே
னிறுகற் பகைவற கிதமோ துவனோ
தெறுகற் சிலைகொண் டெயில்செற் றிடுபூண்
டறுகட் பணியன் தருபுத் திரனே.

87.. கள்ளம் படு
(கவடுதீர, சுவாமி பார்யாயிருக்க)

கள்ளம் படுகட் கடையார் கடைதே
ருள்ளம் படலென் றகலக் களைவாய்
பள்ளம் படுநீ ரெனவே பரிவின்
வெள்ளம் படுநல் வழிவே லவனே.

88.. வள்ளைக் குழை
(பெண்ணாசை தீர)

வள்ளைக் குழைமங் கையர்சிங் கியிலே
கொள்ளைப் படுமென் குறைதீ ருமதோ
வெள்ளைத் தனிமால் விடையன் புகழும்
பிள்ளைப் பெருமா ளெனும்பெற் றியனே.

89. வளையுஞ் சகமாயை
(தன்னையடுத்தோர் மாயை யகல)

வளையுஞ் சகமா யைமயக் கில்விழுந்
துளையுந் துயரின் னுமுணர்ந் திலையே
வளைகொண்ட பிரான் மருகா வடுசூர்
களையுஞ் சினவெங் கதிர்வே லவனே.

90. பண்டே தொடர்
(பழவினை நீக்க)

பண்டே தொடர்பற் றொடுசுற் றமெனும்
வெண்டே ரைமகிழ்ந் துவிழித் திடவோ
கண்டே குறமங் கைதனைக் களவில்
கொண்டே கடிதே கியகொற் றவனே.

91. பொன்னா வல்
(சர்வமும் நன்றாயிருக்க)

பொன்னா வல்கெடப் பொழியும் புகழோ
ரின்னா ரினியா ரெனவெண் ணுவரோ
துன்னார் கிளைவே ரறவே தொடுவேல்
மன்னா பொதுவாய் மழையும் பெயுமே.

92. பொறியும் புலனும்
(சர்வமும் மொன்றாய்க் காண)

பொறியும் புலனும் புதிதும் முதிதும்
குறியுங் குணமுங் குலமுங் குடியும்
நெறியும் பரிசொன் றுமிலா நிலையா
னறியுந் தரமோ வயில்வே லவனே.

93. என்னே ரமதோ
(அடைக்கலம் பெற)

என்னே ரமதோ தெரியா திறனாம்
அன்னே ரமதொன் றாகா தெனமுன்
சொன்னேன் மனனே துவலோ துவலோ
தன்னேர் குகனற் சலசச் சரணே.

94. தெரியத் தெரிய
(பெரியோராக)

தெரியத் தெரியச் செயலுற் றிடுமுன்
துரியப் பொருளைச் சொலுநா ளுளதோ
கரிபெற் றிடுமின் கணவா குறமின்
பரியப் பெரிதும் பணியுத் தமனே.

95. மடிமைப் படினும்
(தடுத்தாட்கொள்ள)

மடிமைப் படினும் மயலுற் றிடினும்
அடிமைக் குரியா ரருள்சே ருவரே
குடிமைக் கிலதோர் கொடிவெற் பிணையிற்
படிமைப் புயலே பரிவா யினியே.

96.. வரிவேல் விழி
(பாசம் அண்டாமல் வேடங்கொள்ள)

வரிவேல் விழியாம் வலுவீ சுமினார்
புரிவே ளையிலே பொருதிக் களைவாய்
பரிவே டஞ்சூழ்ந் ததுபோ லவுணர்த்
தெரிவேன் முனைமே லெறிசே வகனே.

97. நனவிற் படு
(விதியை வெல்ல)

நனவிற் படுநல் லுலகத் தனையும்
கனவிற் பொருளாய்க் கருதா வெனைநீ
வினவிச் சொலுநா ளுளதோ விதியைச்
சினவிச் சிறையிட் டருதே சிகனே.

98. காடும் மலையும்
(சகல பாசமுமற)

காடும் மலையுங் கடலும் முருளச்
சாடுந் தனிவே லுடையாய் சரணம்
ஆடும் மயில்வே லரசே சரணம்
பாடும் வரதற் பரனே சரணம்.

99.. அனியா யமிதென்
(இருவரும் ஒன்றாயிருக்க)

அனியா யமிதென் றவரே மடவார்
துனியார் பவமுந் துயருங் களைவார்
கனியார் முருகன் கழல்பெற் றிடுவா
ரினியா ரினியா ரிவருக் கிணையே.

100. ஆளா யயில்வே
(சிவசாயுச்சியம் பெற)

ஆளா யயில்வே ளடியிற் பணிவார்
கோளாற் பிறரைக் குறிசெய் தழியார்
மாளார் சமனால் மறுகார் பகையால்
மீளார் வினையால் வெருவா ரவமே.

101. வாழ்வா ருறவாய்
(வாழ்த்து)

வாழ்வா ருறவாய் மகிழ்வார் பலருந்
தாழ்வார்க் கருளுத் தமனீ யலையோ
பேழ்வா யரவும் பிறைவெள் ளிறகுஞ்
சூழ்வார் சடையார் தொழுதே சிகனே.

* * * கந்தர் அநுபூதி முற்றிற்று * * *

உனைப் பாடும் தொழில் இன்றி ~ TMS

19 2012

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
எனை காக்க உனையின்றி யாருமில்லை

(உனைப் பாடும் … )
முருகா … முருகா

கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு … கருணையில் உருவான அற்புதமே (2)

சிற்பச் சிலையாக நிற்பவனே (2)

வெள்ளை … திருநீறில் அருளான விற்பனனே
முருகா … முருகா

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
எனை காக்க உனையின்றி யாருமில்லை
முருகா … முருகா

அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை … அழகு வழிகின்ற எழில் வனமே (2)

குமுத இதழ் விரிந்த பூச்சரமே (2)

உந்தன் … குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா … முருகா

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
எனை காக்க உனையின்றி யாருமில்லை
உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
எனை காக்க உனையின்றி யாருமில்லை

முருகா … முருகா.

உள்ளம் உருகுதய்யா ~ TMS

19 2012

உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா … முருகா
உன்னடி காண்கையிலே (2)

அள்ளி அணைத்திடவே (3)
எனக்குள் … ஆசை பெருகுதப்பா
முருகா … உள்ளம் உருகுதய்யா

பாடிப் பரவசமாய் உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா (3)
ஆடும் மயிலேறி (3)

முருகா … ஓடி வருவாயப்பா

உள்ளம் உருகுதய்யா … முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா

முருகா … உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா … பந்த
பாசம் அகன்றதய்யா
உந்தன் மேல் … நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே (3)

எந்தன் … ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும் (2)

அருளை … வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும்
உன் அருளை … வாரி வழங்குதய்யா
வீர மிகுந் தோளும் (2)
கடம்பும் … வெற்றி முழக்குதப்பா
உள்ளம் உருகுதய்யா
கண்கண்ட தெய்வமய்யா (2)
நீ இந்தக் கலியுக வரதனய்யா
கண்கண்ட தெய்வம் ஐயா
நீ இந்த கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல் (2)
எனக்குன் … பதமலர் தருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா … முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா
முருகா … உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா … உள்ளம் உருகுதய்யா.

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் ~ TMS

18 2012

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே

இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே

இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே

ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே (2)

நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே (2)
அதில் … நான் என்றும் மாறாத தனி இனமே

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
கன்னித்தமிழ் பாடுவது புது சுகமே
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே (2)

என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே (2)
அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே

எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு ~ TMS

17 2012

(முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றியும் வினை தீருமே)

முருகனைக் கூப்பிட்டு …

(முருகனைக் கூப்பிட்டு … )

உடல் பற்றியப் பிணி ஆறுமே
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுர
மெத்த இன்பம் சேருமே

அப்பன் முருகனைக் கூப்பிட்டு …

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடுவோருக்கு (3)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடுவோருக்கு
குறைகள் யாவும் போகுமே
அவர் குடும்பம் தழைத்தோங்குமே (2)

சூர சமர வேலாயுதம் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே

ஐயன் முருகனைக் கூப்பிட்டு …

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
முருகா … முருகா …

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்
அன்பு பெருகி அருள் புரிவான்

அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்

அப்பன் முருகனைக் கூப்பிட்டு …

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு (2)

காரியம் கைகூடுமே … பகை மாறி உறவாடுமே (2)

சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே

ஐயன் முருகனைக் கூப்பிட்டு …

(முருகனைக் கூப்பிட்டு … )

முருகனைக் கூப்பிட்டு …
முருகா … .

தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத ~ TMS

16 2012

தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீன் சுவையாகவில்லையே … முருகய்யா …
தீன் சுவையாகவில்லையே (2)

எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே … குமரய்யா …
இன்பம் ஏதும் இல்லையே

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே … முருகய்யா …
அங்கம் மணக்கவில்லையே (2)

சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே … குமரய்யா …
சீர் மணம் வேறு இல்லையே

முத்தும் ரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருளாகவில்லையே … முருகய்யா …
முதற் பொருளாகவில்லையே

சத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே … குமரய்யா …
மெய்ப் பொருள் வேறு இல்லையே

எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே … முருகய்யா …
எண்ணத்தில் ஆடவில்லையே (2)

மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே … குமரய்யா …
மற்றொரு தெய்வமில்லையே

தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீன் சுவையாகவில்லையே … முருகய்யா …
தீன் சுவையாகவில்லையே

எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப்போல்
இன்பம் ஏதும் இல்லையே … குமரய்யா …
இன்பம் ஏதும் இல்லையே

தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீன் சுவையாகவில்லையே … முருகய்யா …
தீன் சுவையாகவில்லையே

முருகய்யா … .

கற்பனை என்றாலும் ~ TMS

15 2012

கற்பனை என்றாலும் … கற்சிலை என்றாலும்

(கற்பனை என்றாலும் … கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்)

நீ …

(கற்பனை என்றாலும் … )

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே (3)
அறுமறை தேடிடும் கருணையங் கடலே

(கற்பனை என்றாலும் … )

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே (2)
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே (2)
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே (2)
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே (2)

(கற்பனை என்றாலும் … )

கந்தனே உனை மறவேன் … (3).

எனக்கும் இடம் உண்டு ~ TMS

14 2012

எனக்கும் இடம் உண்டு

(எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு)

அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்கு பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2)

தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

(எனக்கும் … )

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2)

வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

(எனக்கும் … )

ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் (2)

நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

(எனக்கும் … ).

அழகென்ற சொல்லுக்கு முருகா ~ TMS

12 2012

முருகா … முருகா …
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

(அழகென்ற சொல்லுக்கு முருகா)

சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா (2)
கனிக்காக மனம் நொந்த முருகா (2)
முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா

(அழகென்ற … )

ஆண்டியாய் நின்றவேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா (2)
பழம் நீ அப்பனே முருகா (2)
ஞானப் பழம் உன்னை அல்லாது பழமேது முருகா

(அழகென்ற … )

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற … )

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா (2)
சக்தி உமை பாலனே முருகா (2)
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

(அழகென்ற … )

ப்ரணவப் பொருள்கண்ட திரு முருகா
பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா (2)
அரகரா ஷண்முகா முருகா (2)
என்றே பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா

(அழகென்ற … )

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா (2)
கண்கண்ட தெய்வமே முருகா (2)
எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா

(அழகென்ற … )

உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

(அழகென்ற … )

முருகா … முருகா … முருகா … .