Oora Therinjikiten – ஊரத் தெரிஞ்சிகிட்டேன்

27 2011

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி ஏன் கண்மணி
ஞானம் பொறந்துருச்சி நாளும் புரிஞ்சிசிருச்சி கண்மணி என் கண்மணி
பச்சக் கொழந்தைன்னு பாலுட்டி வளத்தேன்
பால குடிச்சிபுட்டு பாம்பாக கொத்துதடி

(ஊரத் )

எது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்த நேசம் சில மாசம்…
சிந்தினேன் ரதம் சிந்தினேன் அது எல்லாம் வீண்தானோ
வேப்பிலை கறிவேப்பில்லை அது யாரோ நான் தானோ

என் வீட்டு கன்னுக்குட்டி என்னோட மல்லுகட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி

(ஊரத் )

நேற்று இவன் ஏணி இன்று இவன் நியாணி
ஆளக் கர சேத்து ஆடும் இந்தத் தோணி

பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும்
களிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி

அடங்காத கால ஒன்னு அடிமாட போனதடி கண்மணி என் கண்மணி

(ஊரத் )

Oru Kootu Kiliyaga ~ படிக்காதவன்

13 2011

ஒரு கூட்டு கிளியாக , ஒரு தோப்பு குயிலாக பாடு பண்பாடு
இறை தேடப் பறந்தாலும் , திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு
என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் ….

செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர் பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தருமம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும் ………

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா …
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா ….
வெள்ளை இளஞ்சிட்டுகள் ..வெற்றி கொடு கட்டுங்கள் …
சொர்க்கம் அதை தடுங்கள் , விண்ணை தொடுங்கள் …

பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை …..
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை ….
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை …..