கொஞ்சனாள் பொறு தலைவா ~ ஆசை

17 2012

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

(அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்)

(கொஞ்சனாள்)

நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்கொடிய
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா

(அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்)

(கொஞ்சனாள்)

(பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே இவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே மாமன் கண்ணு மூடல்லையே)

என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
காட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போனா அவ
சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேனா

என்னுடைய காதலியே ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேரொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

(அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்)

(கொஞ்சனாள்)

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி ~ ஆசை

28 2012


புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா ?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா ?
(புல்வெளி )
ஹாஹா ஹாஹா ஹஹா ஹாஹா …
ஹஹா ஹாஹா ஹாஹா ஹஹா ஹாஹா …
சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு ?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு ?
இலைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா …
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்
(புல்வெளி )
துள்துள்துள் துல்துல்துல்லேன துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு ?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ந்ஜானம் பெற்றுத் தந்தது யாரு ?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி அருவியை
முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது
சின்னக்குருவி பூவனமே எந்தன் மனம் புன்னகையே
எந்தன் மதம் அம்மம்மா …
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்
(புல்வெளி )

மீனம்மா அதிகாலையிலும் அந்திமாலையிலும்

05 2011

மீனம்மா …அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் நியாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தை எல்லாம் ஒரு காவியமே
சின்னச்சின்ன ஊடல்களும் சின்னச்சின்ன மோதல்களும்
மின்னல்போல வந்து வந்து போகும்

மோதல் வந்து ஊடல் வந்து முட்டிகொண்ட போதும் இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இரு மாதங்கள் நாட்கள் செல்ல
ஆஹாஅ
நிறம் மாற்றிடும் பூக்கள் அல்ல …

மீனம்மா அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் நியாபகமே…

ஒரு சின்னப் பூத்திரியில் ஒழி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல் அங்கிருக்கு உன்னை எட்டிப்பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் என்னை தொட்டுத் தேடுவதா

மாமன்காரன் நானே மாலைபோட்ட மானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்

மீனம்மா மழை உன்னை நனைத்து இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் …
அம்மம்மா அங்கு மழை அடித்தால் எனக்கல்லவா உடல் வேர்த்துவிடும்

அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது

அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது

ஜாதிமல்லிப்பூவே தங்கவேன்னிலாவே
ஆசைதீரவே நேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா உன்னை நேசிக்கவும் அன்று வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பெதரித்து புஷ்பம் பூத்திருக்கு ….