இவள் ஒரு இளங்குருவி ~ பிரம்மா

18 2012

இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம் நித்தம் நித்தம் நடை தத்தி தத்தி பழகும்

(இவள் )

கால் போகும் போக்கில் .. மனம் போகும் நாளில் ..
கிடையாது தடை போட முல்வேளிதான்
நான் போகும் பாதை .. தினம் தோரும் கூட ..
வருகின்ற பூங்காற்றும் என் தோழிதான்
நீண்ட தூரம் ஓடும் மேகம் யாரை தேடுதோ
நீரில்லாமல் வாடும் எந்த ஊரை தேடுதோ
நானும் என்னை கேள்வி கேட்கும் நாள் இது ..
திரு நாள் இது ..

(இவள் )

நான் பாடும் பாட்டு .. தலையாட்டி கேட்டு ..
தினம் தோரும் பூ பூக்கும் தோட்டங்களே
நீரோடை மீது நொடி போழ்தில் பாய்ந்து
இறை தேடும் செந்நாரை கூட்டங்களே
ஆழம் விழுதில் ஊஞ்சல் போட்டு ஆட்டம் ஆடுவேன்
ஆவல் தீர தாளம் போட்டு பாட்டு பாடுவேன்
வேனிற்காலம் வாழ்த்து கூறும் நாள் இது ..
திரு நாள் இது ..

(இவள் )

எங்கிருந்தோ இளங்குயிலின் ~ பிரம்மா

18 2012

love this song….

எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டி விட்டேன் மனக்கதவை, திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய …
எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

ஆஅ ….ஆஅ ….ஆஆ ….ஆஅ …

நீங்காமல் தானே நிழல் போல நானே
வருவேன் உன் பின்னோடு என்னாலும்தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைப்போட்டு சென்றாளும்தான்
பாலை போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காண கூடும் இங்கு ஓர் தினம்
இந்த பால் மனம்

எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

ஆஅ ….ஆஅ ….ஆஆ ….ஆஅ …

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கங்கள் ஏமாறுமா
புரியாத புதிராய் விளங்காத விடையாய்
இருந்தாலும் உன்மைகள் பொய்யாகுமா
என்னைக்கண்டு அச்சம் கொள்ள தேவை இல்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும் அந்த நாள் வரும்