என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் ~ கோபுரங்கள் சாய்வதில்லை

05 2013

என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
சொந்தம்தான் என்று நான் நெனச்சேனே
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு மனகதவதான்
சாத்திவிட்டு போனானே

வானத்து பாத்து பாத்து ஏங்கும் பூமி
மேகத்தை கொஞ்சம் கூட காணும் சாமி

வெயிலிலே காஞ்சு காஞ்சு
வயலும் வரண்டு போனா
பயிரும் கருகாதோ
என் ஆசை ராசாவே
ஆசை உள்ள ரோசாவே
விட்டி விட்டி போனானே

உன்புருஷந்தான் உனக்கு மட்டும்தான்
சொந்தம்தான் அதை நீ மறக்காதே
உன் மனக்கதவை திறந்து வச்சு காத்திருந்தாலே
மன்னவனும் வருவானே

பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏண்டி
பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள் தாண்டி

பெண் பாவம் பொல்லாது
அவன் பாவம் நில்லாது
உணர்வாய் அதை நீயே
உன் ஆசை கண்ணாளன்
யாரென்று நீ சொன்னால்
கொண்டு வந்து செர்பேனே