கை தட்டித்தட்டி அழைத்தாலே ~ ஜோடி

13 2013


கை தட்டித்தட்டி அழைத்தாலே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாலே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாலே
ஜீவன் கலந்தாலே அந்தத் தேன்குயிலே

தர ரம்பம் தர ரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம் பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டால்

[தர ரம்பம் …]

தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம் (2)
பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய்ப் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளொ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளொ

[தரரம்பம் …]

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

22 2011

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)

பூக்களில் உன்னால் ரத்தம்
அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி ஆஆ…
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தானோ
நிலவின் ஒளியெடுத்துத் கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்