தோழியா என் காதலியா யாரடி ~ காதலில் விழுந்தேன்

09 2012

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே (2)

Lets get it down
Just wanna Give my heart to you
My love is just true
Wanna take you on spark
Come oh you Just be on my side
No I am gonna give it up to cool
Read that Because you
You let me let me get a hold of this
again a true true
First let me tell you who you are
Girl you are made for me forever
You get there but it ought to stop
Oh change your speed now

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களைத் தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த் துளியை
மகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களைக் கண்ணருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவதையே
வண்ணங்களைத் தந்து விட்டு என்னருகில் வந்து நில்லு

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)

நம்சனனம்….

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினிப் பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்தென்னைப் பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவைப் போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச் சடங்கில் மிதிகள் படும்
பூவைப் போல கசங்கி விட்டேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாய் அவன் உன் உருவில் தந்து விட்டான்

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)