நாணி கோணி ராணி ~ மாற்றான்

10 2012

நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்கிரேன்
மருதாணி பூத்த காலில் உன்னை தாணே என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன் ..

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா ?

நாணி கோணி ராணி உந்தன் மேனி ஏனோ மொய்கிரேன்
மருதாணி பூத்த காலி என்னை தாணே என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன் ..

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா ?

ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்
கண் பேசும் மௌனமே ஒன்றாக
நான் போகும் சாலைகள் முடியாமல்
எங்கெங்கோ நீளும்

நதியிலே இல்லை போல பயணம்
இனிப்பான தருணம் மனதோடு மாய மின்சாரம்
நித்திரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன் மெதுவாக மெதுவாக
உணதாகிரேன் , உயிரே உயிரே
உயிர் போதும் போலதுனை

[நாணி கோணி …]

தொலை தூரம் போனதே என் மேகம்
புரியாத மென் சோகம் முகிற் மேலே ஊசி இறங்கும்
ஒ பிரிவாலே இன்று நான் போராட
விழி ஓரம் நீரோட , அவள் கண்ணில் காதல் மயக்கம்
உன் அழகை வெளி காட்டும் சாரலில்

என்னை போல சாயலில் ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
நெஞ்சினிலே , புரியாத ஆதங்கம் , மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்
இதயம் இதயம் சுக இருக்கும் இனி ..

[நாணி கோணி ….]

[நீராய் நீராய் …]

யாரோ யாரோ நான் யாரோ ~ மாற்றான்

10 2012

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

முதல் முறை இங்கு நீ இன்றி
நடக்கிறேன் தனியாக
இறந்தும் உன் மூச்சு காற்றை
உணர்கிறேன் இதமாக

சரிபாதியில் இரவும் பகலும்
என்கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும் ?

நினைவால் இனி நான் வாழ
நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம்

[யாரோ யாரோ நான் யாரோ ..]

கனாக்களில் வரும் பெண் பின்பம்
திகைக்கிறேன் யார் என்று
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்
முறைக்கிறாய் நீ நின்று

கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்

நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்

[யாரோ யாரோ நான் யாரோ …]

[காற்றே காட்டறே சொல்வாயோ …]

[இது கனவா கனவா …]

[இது நிழலா நிழலா ]

இது மாலை மயங்கும் வேலையா ~ மாற்றான்

10 2012

இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொர்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

தீயே தீயே ..
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

this is how we like to do it
this is how we like to do it

உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேருமே கண்டேன்

தீயே தீயே ராதியே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீர தீர சேர்ந்தியே ..