மின்னலே நீ வந்ததேனடி ~ மே மாதம்

05 2012


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி

(மின்னலே )

கண் விழித்து பார்த்தபோது களைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இங்கு சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே …)

பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞர் இல்லையா
நான் காத்திருந்தாள் காதல் இன்னும் மீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே …)