பனிவிழும் இரவு ~ மௌளன ராகம்

23 2012

பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா…

(பனிவிழும் இரவு)

பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்லாய் மாறிப்போகும்

(பனிவிழும் இரவு)

காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைத் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்
இதயமே ஓ உதயமோ சொல்
நீரும் வேரும் சேர வேண்டும்

(பனிவிழும் இரவு)

மன்றம் வந்த தென்றலுக்கு ~ மௌளன ராகம்

20 2012

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையே
அது ஏன் ..என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழஅகு வட்ட நிலவோ
கண்ணே ..என் கண்ணே

பூபாளமே ..கூடாதெனும் ..வானம் உண்டோ சொல் ..

(மன்றம் )

தாமரை மேலே நிர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன ?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
புவே உன் வாழ்க்கை தான் என்ன ?

(மன்றம் )

மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன ..வா .

(மன்றம் )