ஓஹோஹோ கிக்கு ஏறுதே ~ படையப்பா

14 2013


ஓஹோஹோ கிக்கு ஏறுதே
ஓஹோஹோ வெட்கம் போனதே

உள்ளுக்குளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள

இந்த வாழ்கை வாழ தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ?

(ஓஹோஹோ ..)

தங்கத்தை பூட்டி விதை
வைரத்தை பூட்டி விதை
உயிரை பூட்ட எது பூட்டு ?

குழந்தை ஞானி , இந்த இருவரை தவிர
இங்கே சுகமாய் இருப்பது யார் காட்டு

ஜீவன் இருக்கும்மட்டும்
வாழ்கை நமதுமட்டும்
இதுதான் ஞானசித்தர் பாட்டு

இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள்
மத சண்டை ஜாதிட்சண்டை வம்பெதுக்கு ?

(ஓஹோஹோ …)

தாயை தேர்ந்தேக்கும்
தந்தையை தேர்ந்தேக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை

முகத்தை தேர்ந்தேக்கும்
நிறத்தை தேர்ந்தேக்கும்
உரிமை உன்னிததில் இல்லை

பிறப்பை தேர்ந்தேக்கும்
இறப்பை தேர்ந்தேக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை

எண்ணி பார்க்கும் வேளையில்
உன் வாழ்கை மட்டும்
உந்தன் கையில் உண்டு
அதை வென்றிடு !

வெற்றி கொடி கட்டு ~ படையப்பா

02 2012

வாழ்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கு படிக்கல்லப்பா

வெற்றி கொடி கட்டு
மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படைஎடு படையப்பா

கைதட்டும் உள்பட்டு
நீ விடும் நெற்றித்துளிபட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா

வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு
வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா

மிக்க துணிவுண்டு
இளைஞர்கள் பக்த துணையுண்டு
உடன்வர மக்கள் படையுண்டு
முடிவெடு படையப்பா

இன்னோர் உயிரை கொன்று
போசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று
ரசிப்பவன் அரக்கனடா

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்

நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா