நான் பொல்லாதவன் ~ பொல்லாதவன்

13 2012


நான் பொல்லாதவன் … .
பொய் சொல்லாதவன் … .
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் – அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் – அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்

(நான் பொல்லாதவன் )

வானத்தில் வல்லூறு வந்தாலே கொழிக்கும்
வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால்
நான் என்ன செய்வேனடி
நாளாக நாளாக தாளாத கோபத்தில்
நான் வேங்கை ஆனேனடி
(நான் பொல்லாதவன்)

நீயென்ன நானென்ன நிஜம் என்ன பொய் என்ன
சந்தர்ப்பம் சதிரானதடி
ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும்
எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்பார்கள்
உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக
இது போல ஆனேனடி

(நான் பொல்லாதவன் )