நதியே நதியே காதல் நதியே ~ ரிதம்

23 2012

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

ஹையோ பத்திகிச்சு

27 2011

ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓ ஓ பெண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ கண்ணே

ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க

ஹையோ பத்திகிச்சு…

ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல் ஒன்றுடன் ஒன்று உரசப் பொறி வருமே வா
வா ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான் ஆசையில் எரியும் சரிதான் அணைவதற்குள் வா வா
வா வா வா வா வா வா
காதல் நெருப்பு உள்ளவரை காலம் உறைவதில்லை
கதிரவனே வா வா காதலிப்போம் வா வா
தீதான் முதல் விஞ்ஞானம் காதல்தான் முதல் மெய்ஞானம்
தீ பத்திகிச்சு…பத்திகிச்சு…பத்திகிச்சு…பத்திகிச்சு…

ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓ ஓ பெண்ணே
முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க

தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும் காதல் எரிவது எதிலே
விடை சொல்ல வா வா வா…வா வா வா வா வா வா
ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி காதல் தன் சுடர் கொளுத்தும்
ஒளி விடுவோம் வா ஹா…வா ஹாஆஆஆ…
காதல் நெருப்பை நீ வளர்த்து கவலைக் குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா சுகம் வளர்ப்போம் வா வா வா
தீபம் போலே இருந்தவள் நான் தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்
பத்திகிச்சு…பத்திகிச்சு…பத்திகிச்சு…பத்திகிச்சு…
ஹையோ…ஹையோ…ஹையோ…ஹையோ…

ஹையோ பத்திகிச்சு…நெஞ்சோ சிக்கிகிச்சு…
ஹையோ…ஹையோ…பத்திகிச்சு…
பத்திகிச்சு…பத்திகிச்சு…பத்திகிச்சு…பத்திகிச்சு…
ஹையோ பத்திகிச்சு…

தனியே தன்னந்தனியே ~ ரிதம்

20 2011

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா…பேரன்பே…புரியாதா…பேரன்பே

ஓஹ்…தனியே…தனியே…தனியே…

அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்

ஓஹோ பப்பாயப் ஆஹா பப்பாய (2)

அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் (2)
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் (2)
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா…பேரன்பே…புரியாதா…பேரன்பே
புரியாதா…

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் (2)
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் (2)
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே…

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா…பேரன்பே…புரியாதா…