சம்சாரம் அது மின்சாரம்

14 2012


சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரம் இல்ல
சம்சாரம்
பந்தம் இல்ல பாசம் இல்ல
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல
சம்சாரம்
நேரம் வந்து நெருங்கி தோட்டா
ஷாக் அடிக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

அப்பன் என்ன ஆத்தா என்ன
ஒப்புக்கு தானடி
பாரங்கல்ல பெத்துபுட்டா
பாசம் ஏதடி
பெத்த புள்ள தந்த பணம்
உப்புக்கு ஆகுமா
தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா
தாலி மிஞ்சுமா
வாயக்கட்டி வளத்த புள்ள
மல்லுக்கட்டி நிக்குதடி
வாங்கி தந்த காசுக்கெல்லாம்
வட்டி கட்ட சொல்லுதடி
கோடு ஒன்னு கிழிக்க வெச்சி
கும்மி அடிக்குது அம்மாடி

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரம் இல்ல
சம்சாரம்
பந்தம் இல்ல பாசம் இல்ல
சொந்தம் இங்கு சொந்தம் இல்ல
சம்சாரம்
நேரம் வந்து நெருங்கி தோட்டா
ஷாக் அடிக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

Version 2:

காலில் ஒரு முள்ளு தச்சா
கண்ணு கலங்குது
கண்ணில் ஒரு தூசு பட்டா
கை தான் மூடுது

சேவல் அன்று கோடு கிழிச்சி
வேலி போட்டது
வேலி தாண்டி கோழி போக
வேலை வந்தது
அக்கம் பக்கம் யாரும் இல்ல
ஆபத்துக்கு பாவம் இல்ல
பாசத்துக்கு சட்டம் இல்ல
மீறுவது குத்தம் இல்ல
பாசத்துக்கு ரேக்க மொளச்சி
பறந்து போகுது தன்னால

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்கொள்ள ஆளும் உண்டு
நெஞ்சுக்குள்ள ஈரம் உண்டு
சம்சாரம்
பந்தம் உண்டு பாசம் உண்டு
சொந்தத்துக்கும் உள்ளம் உண்டு
சம்சாரம்
சூட்ஷுமத்தை தெரிஞ்சிக்கிட்டா
ஒழி கொடுக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
ஹஹா …
சம்சாரம் அது மின்சாரம்

வயசு வந்த புள்ள ஒன்னு
பாடம் படிக்குது
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற
அர்த்தம் வெளங்குது
கட்டிலுக்கு ஆசப் பட்டு
புத்தி அலைஞ்சது
கணவநிங்கே பிள்ளை என்று
கண்டுக்கொண்டது
தன்னடக்கம் வேணும் அம்மா
பெண்மைக்கது நல்லதம்மா
காமத்துக்கும் மோகத்துக்கும்
காலம் நேரம் உள்ளதம்மா
இல்லறத்தில் இன்ப துன்பம்
இரண்டும் உள்ளது பொன்னம்மா

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்கொள்ள ஆளும் உண்டு
நெஞ்சுக்குள்ள ஈரம் உண்டு
சம்சாரம்
பந்தம் உண்டு பாசம் உண்டு
சொந்தத்துக்கும் உள்ளம் உண்டு
சம்சாரம்
சூட்ஷுமத்தை தெரிஞ்சிக்கிட்டா
ஒழி கொடுக்கிற மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

இந்த சொந்தம் என்ன சொந்தம்
யாருக்கும் தோனல
வாய் தெறந்து சொல்ல வந்தா
வார்த்த வரல
வானவில்லா சின்ன புள்ள
வளைக்க பாக்குது
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட
ஆசைப்படுது
சிரகோன்னு மொளைக்கும் முன்னே
பறக்குது பட்டாம்பூச்சி
காம தேவன் ராஜாங்கத்தில்
இது ஒரு கண்ணாமூச்சி
ஆத்துமெட்டில் எழுதி வெச்சத
அலை அடிச்சது அண்ணாச்சி

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்