நானொரு சிந்து காவடிச்சிந்து ~ சிந்து பைரவி

12 2013

நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

(நானொரு சிந்து )

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்
வெல்லாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்கள்ளேன்

(நானொரு சிந்து )

பசு கன்ன்றுப் பால் தேடிப் போகின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை
என் விதி அப்போதே முடிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலையெழுத்தென்ன என் மொதலெழுத்தென்ன
கண்டுபிடி

பாடறியேன் படிப்பறியேன்

08 2011

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

(பாடறியேன்)

அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான்…ஆஆஆ…
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்

சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்

(பாடறியேன்)

கவல ஏதுமில்ல ரசிக்கிறேன் கேட்டுப்படி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்டப் படி
என்னயே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா…ஆஆஆ…
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னுதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா

(பாடறியேன்)