கவிதைகள் சொல்லவா ~ உள்ளம் கொள்ளை போகுதே

27 2012


கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
யார் அந்த ரோஜா பூ? கண்ணாடி நெஞ்சின்மேல்,
கல் வீசி போனால் அவள் யாரோ..

உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும் ஹோ ஹோ ஹோ..
உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும்
கடைசிவரை தனியாய் உருகும் ஹோ ஹோ ஹோ..
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி,
அதற்கு முகம் ஒன்றும் இல்லை..
அந்த கண்ணாடி நான்தானே முகமே இல்லை என்னிடம்தான்..
ஹோ ஹோ ஹோ..

காகிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஹோ ஹோ ஹோ..
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் அசைக்கும் சம்மந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ ஹோ ஹோ ஹோ..
செடியை பூ பூக்க வைத்தாலும், வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உடத்தில் புன்முறுவல் பூத்தாலும், உள்ளே சருகாய் கிடக்குதே..
ஹோ ஹோ ஹோ..

கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
யார் அந்த ரோஜா பூ? கண்ணாடி நெஞ்சின்மேல்,
கல் வீசி போனால் அவள் யாரோ..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..