ஆழ்வார்பேட்டை ஆளுடா ~ வசூல் ராஜா

05 2012


ஆழ்வார்பேட்டை ஆளுடா , அறிவுரையே கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா , காதல் போயின் சாதலா
இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே , லவ் பண்ணுடா மவனே
லவ் பண்ணுடா மவனே , லவ் பண்ணுடா மவனே

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா , நர்சு பொன்னை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ
ஆழ்வார்பேட்டை , ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா , ஒரே காதல் ஊரில் இல்லையடா
பண்ணணு வயசில பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே , அதன் பேர் லவ் இல்லே , கண்ணை பார்த்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பார்க்குமே
லவ் இல்லே , அதன் பேர் லவ் இல்லே
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் பொது
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் பொது
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே
இதுக்கு என் உசுர குடுக்கணும்
எதனையும் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலக்கம் தானடா

ஆழ்வார்பேட்டை ஆண்டவா , வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா , ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா , இன்னோர் காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
போடு …வா நர்சம்மா …அய்யோ
பார்கபோனா மனுஷனுக்கு ப்ஹசட்டு தோல்வி காதல்தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமையெல்லாம் First-u காணும் தோல்விதான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது

டாவு கட்டி தோத்து போனவங்க எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டு போடா ஆளே இல்லையடா
ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆனா பின்னே
உன் லவுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா
ஐய்யயோ இதுக்கா அழுவுறே , Life-la ஏன்டா நழுவுறே
காதல் ஒரு கடலு மாறிடா
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா
டே டே , ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொன்னை காதலி
கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ

கலக்க போவது யாரு ~ வசூல் ராஜா

05 2012


கலக்க போவது யாரு ? – நீ தான்
நிலைக்க போவது யாரு ? – நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு ? – நீ தான்
வயசை தொலைத்தவன் யாரு ? – நீ தான்
உனக்கு தானே கொடுக்க வேண்டும்
டாக்டர் பட்டம் , டாக்டர் வாழ்க
ராஜா வசூல் ராஜா M.B.B.S.
ராஜா வசூல் ராஜா M.B.B.S.

எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்
நண்பர்கள் நலம் காண
விழுவது போல் கொஞ்சம் விழ்வேன்
எனது எதிரிகள் சுகம் காண
உள்ளத்தில் காயங்கள் உண்டு , அதை நான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்
துயரத்தை எரித்து , உயரத்தை வளர்த்து
துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து
வாழ்வேன் நலம் காண்பேன்

[கலக்க போவது … ]

வழிகளில் நூறு தடை இருந்தால் தான்
வாழ்கை ருசியாகும்
மேடுகள் கடக்கும் நதியினில் தானே
மின்சாரம் உண்டாகும்
காம்பினில் பசும்பால் கறந்தால் , அது தான் சாதனை
கொம்பிலும் நான் கொஞ்சம் கரைப்பேன் , அது தான் சாதன
சமுத்திரம் பெரிதா ? தேன் துளி பெரிதா ?
சமுத்திரம் பெரிதா ? தேன் துளி பெரிதா ?
தேன் தான் , அது நான் தான் ை

[கலக்க போவது … ]