கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட ~ வீரா

18 2012


கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் வலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ அன்பில் வந்த ராகமே.. அன்னை தந்த கீதமே..
என்றும் உன்னைப்பாடுவேன் – மனதில்
இன்பத் தேனும் ஊறும்

மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன்மயிலாடுது வெண்பனி தூவுது
பூமியெ-ங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சல் ஆட
அன்னங்களின் ஊர்வலம்…
ஸகரிமகபமதபநிதஸ்நிரிஸ்நி
ஸ்வரங்களின் தோரணம்…
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கண்களின் ஆதலவால் பொன்னி
ஆற்றில் பொன்போல் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்…
ஸகரிமகபமதபநிதஸ்நிரிஸ்நி
வானவில் ஓவியம்…
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே