தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண் தான் ~ மூன்று முகம்

20 2013

தேவாம்ருதம் ஜீவாம்ருதம்
பெண் தான்
சந்திரோதயம் சூர்யோதயம்
கண் தான்

துறவறம் என்ன சுக தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள்
உண்டாகும் பேரின்பம்

டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா

[தேவாம்ருதம் ..]

[துறவறம் ..]

[டிஸ்கோ ராமா ..]

இஹம் பரம்
சுகம் ஆகலாம்
இதழ் தரும்
இனிய மதுவில்
ஜெபம் தவம்
இனி ஏதடி
மனம் தினம்
உனது மடியில்
இதைவிடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜயோகம்
இதைவிடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜயோகம்
உற்ச்சாகம் உல்லாசம்
உண்டாகும் பெண்ணாலே தான்

[தேவாம்ருதம் ..]

everybody

[டிஸ்கோ ராமா …]
ஷபரிப பா
ப ப ப
லல்ல்லாலால்லல

தளர் நடை
தடுமாறுதே
தளிர் இடை
தழுவ தழுவ
தணல் சுடும்
நிலை ஆனதே
விரல் நகம்
பதிய பதிய
மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக் கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும்
மின்சாரம் பாய்கின்றதே

[தேவாம்ருதம் ..]

துறவறம் என்ன
சுக தரும்
என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள்
உண்டாகும் பேரின்பம்

come on

டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா

English
devaamrudham jeevaamrudham
pen dhaan
chandrodhayam sooryodhayam
kan dhaan

thuravaram enna
suga tharum
endrum
pennodu konjungal
undaagum paerinbam

disco raama disco krishna
disco diwaana
diwaana
disco raama disco krishna
disco diwaana

devaamrudham jeevaamrudham
pen dhaan
chandrodhayam sooryodhayam
kan dhaan

thuravaram enna
suga tharum
endrum
pennodu konjungal
undaagum paerinbam

disco raama disco krishna
disco diwaana
diwaana
disco raama disco krishna
disco diwaana

iham param
sugam aagalaam
idhazh tharum
iniya madhuvil
japam thavam
ini yaedhadi
manam dhinam
unadhu madiyil
idhaividavaa inbalogam
idhuvallavaa raajayogam
idhaividavaa inbalogam
idhuvallavaa raajayogam
urchchaagam ullaasam
undaagum pennaalae dhaaaan

devaamrudham jeevaamrudham
pen dhaan
chandrodhayam sooryodhayam
kan dhaan

everybody

disco raama disco krishna
disco diwaana
diwaana
disco raama disco krishna
disco diwaana

shabariba baa
pa pa pa
lalllaalaallala

thalar nadai
thadumaarudhae
thalir idai
thazhuva thazhuva
thanal sudum
nilai aanadhae
viral nagam
padhiya padhiya
mananilaiyai maattri vaiththaai
pudhuk kanalai aettri vaiththaai
mananilaiyai maattri vaiththaai
pudhuk kanalai aettri vaiththaai
thottaalum pattaalum
minsaaram paaigindradhae

devaamrudham jeevaamrudham
pen dhaan
chandrodhayam sooryodhayam
kan dhaan

thuravaram enna
suga tharum
endrum
pennodu konjungal
undaagum paerinbam

come on

disco raama disco krishna
disco diwaana
diwaana
disco raama disco krishna
disco diwaana
diwaana
disco raama disco krishna
disco diwaana
diwaana
disco raama disco krishna
disco diwaana

புத்தம் புது காலை ~ அலைகள் ஓய்வதில்லை

30 2013

புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

[புத்தம் புது ..]

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்

[புத்தம் புது காலை …]

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசை பாடுது
வழி கூடிடும் சுவை கூடுது

[புத்தம் புது காலை …]

English
putham pudhu kaalai
ponnira velai
en vazhvile
thinandhorum thondrum
suga raagam kaetkum
ennaalum anandham

putham pudhu kaalai
ponnira velai
en vazhvile
thinandhorum thondrum
suga raagam kaetkum
ennaalum anandham

poovil thondrum vaasam adhuthaan raagamo
ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo
manadhin aasaigal malarin kolangal
kuyilosayin paribhashaigal
adhikaalaiyin varaverpugal

putham pudhu kaalai
ponnira velai
en vazhvile
thinandhorum thondrum
suga raagam kaetkum
ennaalum anandham

vaanil thondrum kolam adhai yaar pottadho
pani vaadai veesum kaatril sugam yaar saerthadho
vayadhil thondridum ninaivil anandham
valarndhoduthu isai paaduthu
vazhi koodidum suvai kooduthu

putham pudhu kaalai
ponnira velai
en vazhvile
thinandhorum thondrum
suga raagam kaetkum
ennaalum anandham

காதலின் தீபம் ஒன்று ~ தம்பிக்கு எந்த ஊரு

12 2013

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
(காதலின் )

நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் காதலே
எண்ணம் யாவும் சொல்ல வா

(காதலின் )

என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அல்லும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

(காதலின் )

சிறிய பறவை சிறகை ~ அந்த ஒரு நிமிடம்

12 2013


சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே ……….

(சிறிய பறவை )

அன்பு லைலா நீயே எந்தன் ஜீவா சொந்தம்
நீ சிரித்தாள் பாலை எங்கும் பூ வசந்தம்
சம்மதம் என்ன சொல்லவா மௌனமே சொல்லும் அல்லவா
இன்பமாய் என்னை மாற்றவா உன்னையே வந்து ஊற்றவா
மது போதை வேண்டுமா இதழ் போதை நல்லது
உன் பேரைச் சொல்கிறேன் அதில் போதை உள்ளது
வருகவே வருகவே

(சிறிய பறவை )

மன்றமே தமிழின் மஞ்சமே புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்
சுவர்ணமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே
நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள் பற்றுமே ஒற்றுமே
சோழன் குயில் பாடுகையில் சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய்வலிக்கும்
சங்கமே இன்பம் தந்தது கங்கையே இன்று தந்தது
தென்றலே இங்கு நின்றது அன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ்கின்றது
வாழ்கவே வாழ்கவே

(சிறிய பறவை )

அன்பு ரொஅமியொஅ இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை
காதலின் கல்விச் சாலையில் கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்
நம் காதல் பாடவே சுவரம் ஏழு போதுமா
நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா
தனிமையை பொலியுமா

பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளைய கவிகள்
எழுதவே எழுதவே

என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் ~ கோபுரங்கள் சாய்வதில்லை

05 2013

என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
சொந்தம்தான் என்று நான் நெனச்சேனே
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு மனகதவதான்
சாத்திவிட்டு போனானே

வானத்து பாத்து பாத்து ஏங்கும் பூமி
மேகத்தை கொஞ்சம் கூட காணும் சாமி

வெயிலிலே காஞ்சு காஞ்சு
வயலும் வரண்டு போனா
பயிரும் கருகாதோ
என் ஆசை ராசாவே
ஆசை உள்ள ரோசாவே
விட்டி விட்டி போனானே

உன்புருஷந்தான் உனக்கு மட்டும்தான்
சொந்தம்தான் அதை நீ மறக்காதே
உன் மனக்கதவை திறந்து வச்சு காத்திருந்தாலே
மன்னவனும் வருவானே

பூவான நெஞ்சுக்குள்ளே வாட்டம் ஏண்டி
பொல்லாங்கு செய்வோரெல்லாம் ஆண்கள் தாண்டி

பெண் பாவம் பொல்லாது
அவன் பாவம் நில்லாது
உணர்வாய் அதை நீயே
உன் ஆசை கண்ணாளன்
யாரென்று நீ சொன்னால்
கொண்டு வந்து செர்பேனே

மேகம் கொட்டட்டும் ~ எனக்குள் ஒருவன்

27 2012

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
ராகங்கள் தீராது பாடாமல் போகாது வானம்பாடி ஓயாது

(மேகம் )

எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜமழையை இசைமழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிரெடுத்தால் வானத்திற்கே குடைகொடுங்கள் நீங்கள்

பாட்டுக்கள் வான்வரை கேட்குமே என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே

(மேகம் )

மழை வந்ததாலே இசை நின்று போகுமா
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமா
ராகங்களால் தீபங்களை ஏற்றிவைத்தான் டான்சேன்
ராகங்களால் மேகங்களை நான் நிறுத்திவைப்பேன் என்பேன்
ரசிகனின் ஆர்வத்தைப் பார்க்கிறேன் உங்கள் பாதத்தில் என்தலை சாய்க்கிறேன்
இசை எந்தன் ஜீவன் என்பேனே

லாலா லல்லல்லா லாலாலாலா (2)

தென்மதுரை வைகை நதி (Sad Version)

27 2012

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு (2)
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

(தென்மதுரை …)

பிள்ளை போல என்னை இங்கே கையில் ஏந்தும் தெய்வம் எங்கே
அண்ணன் நல்ல தந்தை நீயே என்னை காத்து நீ
சென்றாயே
கங்கை போல கண்ணீர் கொண்டு மங்கை நீயும் நின்றாய்
இங்கே
அன்னை போல உன்னை பார்த்தேன் அண்ணி உந்தன் கண்ணீர்
தீர்பேன்
அண்ணன் வழி நம் பாதை அண்ணன் மொழி நம் கீதை
அண்ணன் உயிர் நம்மோடு என்றும் வரும் பின்னோடு
நம் நேசம் பாசம் நாளும் வாழ்க

(தென்மதுரை …)

(தென்மதுரை …)

(தென்மதுரை …)

நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு
பூவை சூடி போட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே
உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம் மாறாதம்மா என்னாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

(தென்மதுரை …)

என்னம்மா கண்ணு சௌக்கியமா ~ மிஸ்டர் பாரத்

21 2012

MV – என்னம்மா கண்ணு சௌக்கியமா
SPB – ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
MV – என்னம்மா கண்ணு சௌக்கியமா
SPB – ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

MV – யானைக்கு சின்ன பூனை போட்டிய – துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா

SPB – யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் – உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்

(என்னம்மா கண்ணு )

MV – வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

SPB – சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயுருந்தா மீசை முறுக்கு

MV – சத்தியத்தை நம்பி ஓஹோ ஹோ ஹோ ….
லாபமில்லை தம்பி ஓஹோ ஹோ ஹோ ….

SPB – நிச்சயமா நீதி ஆஹா ஹாஹ ஹா ….
வெல்லும் ஒரு தேதி அஹ ஹாஹ ஹா ….

MV – உன்னாலதான் ஆகாது வேகாது
SPB – கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும்

(என்னம்மா கண்ணு )

MV – எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல
என்னுடைய சொல்ல யாரும் தட்டியதும் இல்ல

SPB – இன்னொருவன் என்ன வந்து தொட்டதும் இல்ல
தொட்டவன தப்பிக நான் விட்டதும் இல்ல …

MV -மீசையில மண்ணு ஓஹோ ஹோ ஹோ ….
வெட்டுறத என்னு ஆஹா ஹாஹ ஹா ….

SPB – பாயும் புலி நான் தான் . ஆஹா ஹாஹ ஹா ….
பாக்க போற நீ தான் ஆஹா ஹாஹ ஹா ….

MV – சும்மாவும் தான் பூச்சாண்டி காட்டாதே
நம்மகிட்ட போடாதே தப்பு தாளம் தான்

[என்னமா கண்ணு …]

எங்கிருந்தோ இளங்குயிலின் ~ பிரம்மா

18 2012

love this song….

எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டி விட்டேன் மனக்கதவை, திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய …
எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

ஆஅ ….ஆஅ ….ஆஆ ….ஆஅ …

நீங்காமல் தானே நிழல் போல நானே
வருவேன் உன் பின்னோடு என்னாலும்தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைப்போட்டு சென்றாளும்தான்
பாலை போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காண கூடும் இங்கு ஓர் தினம்
இந்த பால் மனம்

எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

ஆஅ ….ஆஅ ….ஆஆ ….ஆஅ …

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கங்கள் ஏமாறுமா
புரியாத புதிராய் விளங்காத விடையாய்
இருந்தாலும் உன்மைகள் பொய்யாகுமா
என்னைக்கண்டு அச்சம் கொள்ள தேவை இல்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும் அந்த நாள் வரும்

எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டி விட்டேன் மனக்கதவை, திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய …
எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே ~ அன்புள்ள ரஜினிகாந்த்

18 2012

Sad Feeling ……………Makes to cry ………

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றியே யாரும் இல்லையே
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றியே யாரும் இல்லையே

[கடவுள் உள்ளமே ..]

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாச பந்தமே

[கடவுள் உள்ளமே …]

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்குறு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஞானம் இல்லையே இறைவா உயிர்பிரப்பில்
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

சென்பகமே சென்பகமே ~ எங்க ஊரு பாட்டுகாரன்

14 2012

Love this song ….

Sad Female Version

Tamil
பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசே வாசம் வரும் மல்லிகையும்
தொட்டு தொட்டு நான் பறிக்க துடிக்கிதந்தே செண்பகம்

சென்பகமே சென்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

சென்பகமே ..

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு

என்னோட பாட்டு சத்தம் சேரும் உன்ன பின்னாலே
எப்போதும் உன்னதொட்டு பாடப்போறேன் முன்னாலே

சென்பகமே

மூன்றாம் பிறையை போல காணும் நெத்தி போட்டோட
நாளும் கலந்திருக்க வேணும் இந்த பாட்டோட
கருத்தது மேகம் தலைமுடி தானோ
இழுத்தது எல்லாம் பூவிழி தானோ
எள்ளுப்பூ ஆசி பத்தி பேசி பேசி தீராது
உன் பாட்டுகாரன் பாட்டு உன்னேவிட்டு போகாது

சென்பகமே

Sad Female version

சென்பகமே சென்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

சென்பகமே ..

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் ஏனோ வாடிடளாச்சு
உன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ நீ என்னை தொட்டு பேசபோறே முன்னாலே

சென்பகமே

பூ வச்சி பொட்டும் வச்சி மேளம் கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் போட்டுகூட எங்கே அந்த சந்தோஷம்

பூ வச்சி பொட்டும் வச்சி மேளம் கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் போட்டுகூட எங்கே அந்த சந்தோஷம்
உன் அடி தேடி நான் வருவேனே
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராஜாவே உன்னைதொட்டு நானும் வாழ மாட்டேனா
என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா

சென்பகமே …
English
Pattu pattu poochi pole ethanaiyo vannam minnum
Nattu vachu naan parikkaa naan vaLartha nandhavanam
Katti vaikum en manase vaasam varum malligaiyum
Thottu thottu naan parikka thudikkidhandhe shenbagam

Shenbagame shenbagame
Thenpodhigai sandhaname
Thedi varum en maname
Serndhirundhaa sammadhame

Shenbagame..

un paadham pogum paadhai naanum poga vandhene
un mele aasaipattu kaathu kaathu ninnene
un mugam parthu nimmadhiyaachu
en manaam thaana paadidalachu
ennoda pattu satham serum unna pinnale
eppodhum unnathottu paadaporen munnale

Shenbagame

Moondrampiraiyai pole kaanum nethi pottoda
NaaLum kalandhirukka venumindha pattoda
Karuthadhu megam thalaimudithaano
Izhuthadhu ellaam poovizhithaano
eLLuppoo aasi pathi pesi pesi theeradhu
Un pattukaaran pattu unnevittu pogaadhu

Shenbagame

Sad Female version

Shenbagame shenbagame
Thenpodhigai sandhaname
Thedi varum en maname
Serndhirundhaa sammadhame

Shenbagame..

un paadham pogum paadhai naanum poga vandhene
un mele aasaipattu kaathu kaathu ninnene
un mugam parthu nimmadhiyaachu
en manaam aeno vaadidalaachu
unnoda pattu satham serum enna pinnale
eppo nee ennai thottu pesapore munnale

Shenbagame

Poovachu pottumvachu meLamkotti kalyanam
Poomanjam pottukooda engae andha sandhosham
un adi thedi naan varuvene
un vazhi parthu naan iruppene
Raasathi unnaithottu naanum vaaramattenaa
en veetukaaran pattu kaadhil ketkamattenaa

shenbagame

சொர்க்கம் மதுவிலே ~ சட்டம் என் கையில்

14 2012


சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிஜம் நிஜம்
இன்பம் இரவு தான்
எல்லாம் உறவு தான்
இன்பம் இரவு தான்
எல்லாம் உறவு தான்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூரிடம்்

காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூரிடம
குடிக்கிறேன் அணிகிறேன் நினைத்ததை மறக்கிறேன்
சொர்க்கம் மதுவிலே
சொக்கும் ஆசாகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிஜம் நிஜம்
இன்பம் இரவு தான்
எல்லாம் உறவு தான்
இன்பம் இரவு தான்
எல்லாம் உறவு தான்

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
மறந்துதான் மயங்கவா
இதற்கு நான் இணங்கவா

திராட்சை ரசம் ஊற்றி மனதீயை அணைக்கிறேன்
சேவை இதழ் பெண்ணில் எனையும் மூழ்கி கழிக்கிறேன்
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே

சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிஜம் நிஜம்
இன்பம் இரவு தான்
எல்லாம் உறவு தான்
இன்பம் இரவு தான்
எல்லாம் உறவு தான்

ராஜா ராஜாதி ராஜன் ~ அக்னி நட்சத்திரம்

14 2012


ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே … எப்பவும் naan ராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்லே , அப்பாவும் நான் ராஜா

ராஜா

வரவும் செலவும் இரண்டும் இன்றி வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி உறவும் பகையும் உண்டு
வரவும் செலவும் இரண்டும் இன்றி வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசை பாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும் கடலும் நதியும் கவிதை சொல்லும்

ராஜா

இடையும் உடையும் இரண்டும் இன்றி இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி மானும் மீனும் உண்டு
இடையும் உடையும் இரண்டும் இன்றி இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி மானும் மீனும் உண்டு
உள்ளம் அலை பாயுது எண்ணம் வசை போடுது
கண்கள் வலை வீசுது காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும் கடலும் நதியும் கவிதை சொல்லும்
ராஜா …..